வெளிநாட்டு நிதி பெறும் என்.ஜி.ஓ.,க்கள்; லைசென்ஸ் புதுப்பிக்க புதிய கட்டுப்பாடு
வெளிநாட்டு நிதி பெறும் என்.ஜி.ஓ.,க்கள்; லைசென்ஸ் புதுப்பிக்க புதிய கட்டுப்பாடு
ADDED : அக் 01, 2025 04:05 AM

புதுடில்லி: வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெறும் தன்னார்வ தொ ண்டு நிறுவனங்கள் லைசென்சை புதுப்பிக்க புதிய கட்டுப்பாடை மத்திய உள்துறை அமைச்சகம் விதித்துள்ளது. அதன்படி லைசென்ஸ் காலாவதி ஆவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ள து.
சான்றிதழ் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010ன் படி பதிவு செய்வது கட்டாயம்.
இவ்வாறு பதிவு செய்து பெறும் சான்றிதழ் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும். பின்னர் புதிய விண்ணப்பங்கள் சமர்ப்பித்து புதுப்பித்து கொள்ளலாம்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விதித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
ஏற்கனவே பெற்ற லைசென்ஸ் காலாவதி ஆவதற்கு ஆறு மாதங்களுக்குள் புதுப்பித்தலுக்கு அந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதன்படி விண்ணப்பம் பெறப்பட்ட 90 நாட்களுக்குள் அந்த நிறுவன பதிவு புதுப்பிக்கப்படும். ஆனால் பெரும்பாலான அமைப்புகள் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை சான்றிதழ் காலாவதியாவதற்கு 90 நாளுக்கும் குறைவான காலத்தில் தான் விண்ணப்பிக்கின்றன.
கால அவகாசம்
புதுப்பித்தல் தொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து தேவையான சான்றிதழ் பெற இந்த கால அவகாசம் போதுமானதல்ல. இதனால் அந்த விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டதாக கருதி வெளிநாட்டு நிதியுதவியை அந்த என்.ஜி.ஓ.,கள் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.