தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சுவிட்சர்லாந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்த எதிர்ப்பு

சுவிட்சர்லாந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்த எதிர்ப்பு

சுவிட்சர்லாந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்த எதிர்ப்பு


UPDATED : ஜூன் 14, 2026 10:46 PM

ADDED : ஜூன் 14, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 10:46 PM ADDED : ஜூன் 14, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு பார்லி.,யில் சட்டம் இயற்ற வேண்டும் என கோரி 'சுவிஸ் மக்கள்' கட்சி நேற்று பொது ஓட்டெடுப்பு நடத்தியது. இதற்கு அந்நாட்டு அரசும், முக்கிய கட்சிகளின் எம்.பி.,க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொதுமக்களும் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

பிரேசில் கயிறு கட்டாமல் 'பங்கி ஜம்ப்' :இளம்பெண் பரிதாப பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள ஸ்கெலட்டன் பாலம் என்ற இடத்தில் நடந்த 'பங்கி ஜம்ப்' என்ற சாகச விளையாட்டில் மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ், 21, என்ற இளம் பெண் பங்கேற்றார். இந்த சாகச விளையாட்டு முறையான பாதுகாப்புடன் உயரமான இடங்களில் இருந்து குதித்து விளையாடும் விளையாட்டாகும். ஆனால், இவ்விளையாட்டில் பங்கேற்ற மரியாவுக்கு உரிய பாதுகாப்பு கயிறு கட்டப்படாமலேயே உயரமான பாலத்தில் இருந்து அங்குள்ள பணியாளர்கள் அவரை குதிக்க செய்தனர். இதனால் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரிட்டன் :ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற கப்பல் சிறைபிடிப்பு

ஐரோப்பிய நாடான பிரிட்டன் அருகே இங்கிலீஷ் கால்வாய் கடல் பகுதியில், தடையை மீறி ரஷ்யாவின் கச்சா எண்ணெயை ஏற்றி வந்த கப்பலை அந்நாட்டு கடற்படையினர் சிறை பிடித்தனர்.

உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து, ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. எனினும், கச்சா எண்ணெய் விற்பனையை ரஷ்யா தொடர்ந்து செய்கிறது. இதற்காக முறையான காப்பீடு இல்லாத நுாற்றுக்கணக்கான ரகசிய கப்பல்களை அந்நாடு பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு போலி பெயரில் வந்த ரஷ்யா கச்சா எண்ணெய் கப்பல் நேற்று சிறைபிடிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us