தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/செய்திகள் : உலகம்

செய்திகள் : உலகம்

செய்திகள் : உலகம்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வியட்நாம்

இறைச்சிக்காக பூனைகளை

திருடிய கும்பல் கைது

ஹனோய்: தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் வடபகுதிகளில், அதிலும் முதியவர்கள் பூனை இறைச்சியை விரும்பி சாப்பிடுகின்றனர். பூனை இறைச்சி சாப்பிட்டால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது.

இதை வைத்து வியட்நாமின் ஹோசிமின் நகரில், மாநகரப் பகுதியில் சுற்றித் திரிந்த பூனைகளை திருடி, இறைச்சி வர்த்தகத்தில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வந்தது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் ஊருக்குள் வலம் வரும் இந்த கும்பல், அதிகாலை வரை, பொதுமக்கள் துாங்கும் நேரத்தில், வீதிகளில் திரியும் பூனைகளை குறிவைத்து துாக்கிச் சென்றுள்ளது.

கடந்த ஜூலை மாதம் போலீசார் நடத்திய சோதனையில், அந்தக் கும்பலைச் சேர்ந்த 12 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 50 பூனைகளும் பல கூண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதுவரை, 2,700 பூனைகளை திருடியுள்ளதாக அந்த கும்பல் போலீசாரிடம் ஒப்புக்கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us