தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சவுதி மீதான தாக்குதல்களுக்கு ஹவுதி அமைப்பு பொறுப்பேற்பு

சவுதி மீதான தாக்குதல்களுக்கு ஹவுதி அமைப்பு பொறுப்பேற்பு

சவுதி மீதான தாக்குதல்களுக்கு ஹவுதி அமைப்பு பொறுப்பேற்பு


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சனா: சவுதி அரேபியாவில் தலைநகர் ரியாத் விமான நிலையம் முதல், `அராம்கோ' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வரையிலான அனைத்து தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்பதாக ஹவுதி பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஏமனின் அரசு படைக்கும், அந்நாட்டின் உள்நாட்டு பயங்கரவாத குழுவான ஹவுதிக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஏமன் அரசுக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கு ஈரானும் ஆதரவளித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சற்று ஓய்ந்திருந்த உள்நாட்டு போர், கடந்த மாதம் முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

ஏமன் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளை ஹவுதி அமைப்பினர் கைப்பற்றி வருகின்றனர். அப்பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஏமன் அரசும், அதற்கு ஆதரவாக சவுதி படைகளும் ஹவுதி அமைப்புடன் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனில் மட்டுமின்றி, சவுதி அரேபியாவிலும் தங்கள் தாக்குதல்களை ஹவுதி அமைப்பினர் விரிவுபடுத்தியுள்ளனர்.

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், ராபிக் நகரில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் சவுதி அரேபியாவின் தெற்கே உள்ள பல சிறிய விமான நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களுக்கு ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us