தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி: அக். 7

தேசியம் பேட்டி: அக். 7

தேசியம் பேட்டி: அக். 7


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 08:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விரக்தியின் வெளிப்பாடு!


அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர். இது, அவர்களின் தேர்தல் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. அப்படி எனில், தேர்தல் கமிஷன் நடத்திய தேர்தல்களில் அக்கட்சியினர் பெற்ற வெற்றிகள் சட்டவிரோதமானவையா?
- சிவராஜ் சிங் சவுகான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,



கூட்டணியில் இல்லை!


எங்கள் கட்சி, ‘இண்டி’ கூட்டணியில் அங்கம் வகிக்காததால், டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், அப்பதவிக்கான நியமன நடைமுறை தவறானது. இதை, மாற்ற வேண்டும். தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும்.
- அசாதுதீன் ஓவைசி
தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி



நாடகத்தை நிறுத்துங்கள்!


தேர்தல் கமிஷன் மற்றும் உச்ச நீதிமன்றத்தை தொடர்ந்து தாக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தங்களின் தினசரி நாடகத்தை உடனே நிறுத்த வேண்டும். அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளை தாக்குவது, ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் பயனளிக்காது; மக்கள் ஆதரவை மீண்டும் பெற அக்கட்சியினருக்கு இது உதவாது.
- கிரண் ரிஜிஜூ
மத்திய அமைச்சர், பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us