காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ.,; பயங்கரவாதிகளை பிடிக்க தீவிரம்
காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ.,; பயங்கரவாதிகளை பிடிக்க தீவிரம்
ADDED : ஏப் 23, 2025 01:24 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்திற்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் விரைந்தனர். பயங்கரவாதிகளை பிடிக்க காஷ்மீர் போலீசாருக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் உதவி செய்வார்கள்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்திற்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் விரைந்தனர்.
மலைப்பகுதியில் இருந்து திடீரென தாக்குதல் நடத்திய இடத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடந்து வருகிறது.
என்.ஐ.ஏ., அதிகாரிகள் பயங்கரவாதிகளை பிடிக்க காஷ்மீர் போலீசாருக்கு உதவியாக இருப்பார்கள். இதனால் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

