காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு நிகில் குமாரசாமி எச்சரிக்கை
காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு நிகில் குமாரசாமி எச்சரிக்கை
ADDED : டிச 09, 2024 06:54 AM

ராம்நகர்: 'சென்னப்பட்டணா ம.ஜ.த., தொண்டர்களை, காங்கிரசின் புதிய எம்.எல்.ஏ., யோகேஸ்வர் கொடுமைப்படுத்துகிறார். அமைதியாக இருக்கிறோம் என எண்ண வேண்டாம்' என ம.ஜ.த., மாநில இளைஞர் அணி தலைவர் நிகில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னப்பட்டணாவில் சிறுசிறு விஷயங்களுக்காக எங்கள் கட்சி தொண்டர்களை, போலீஸ் மூலம் தொந்தரவு கொடுப்பதை, காங்கிரஸ் புதிய எம்.எல்.ஏ., நிறுத்தி கொள்ள வேண்டும். அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி, தொண்டர்களுக்கு தொந்தரவு கொடுத்தால், வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவோம்.
காங்கிரஸ் தலைவர்களின் தாளத்துக்கு அரசு அதிகாரிகள் நடனமாடுகின்றனர். விரைவில் இதற்கு நீங்கள் விலை கொடுக்க நேரிடும். தேர்தலில் அளித்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றுங்கள். ம.ஜ.த., தொண்டர்களை ஒழித்துவிடுவோம் என்று கூறுவது சரியல்ல. சென்னபட்டணா தொகுதி மக்கள் பக்கம் இருக்கிறேன். அவர்களுக்காக உழைப்பேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.