தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நீளம் தாண்டுதலில் நிஷாத் குமாருக்கு தங்கம்

நீளம் தாண்டுதலில் நிஷாத் குமாருக்கு தங்கம்

நீளம் தாண்டுதலில் நிஷாத் குமாருக்கு தங்கம்


UPDATED : அக் 19, 2026 05:08 PM

ADDED : அக் 19, 2026 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 05:08 PM ADDED : அக் 19, 2026 04:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நிஷாத் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

ஜப்பானின் அய்ச்சி- நாகோயாவில் இன்று நடந்த ஆண்களுக்கான டி-47 பிரிவு நீளம் தாண்டுதல் போட்டியில், நிஷாத் குமார் 7.11 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். மூன்றாவது மற்றும் ஐந்தாவது முயற்சிகளில் அவர் இந்த தூரத்தை எட்டினார்.

கடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இவர், தற்போது நீளம் தாண்டுதலில் பங்கேற்ற முதல் போட்டியிலேயே தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

மேலும் இரண்டு தங்கம்

ஆசிய விளையாட்டில் தடகளத்தில் மகளிர் பிரிவில் இந்தியாவின் சவுமியா தங்கம் வென்றார். ராதா வெங்கடேஷ் வெள்ளி வென்றார்.

ஈட்டி எறிதலில் எப் 46 பிரிவில் இந்தியாவின் ரிங்கு தங்கபதக்கமும், அஜித் சிங் வெள்ளியும் வென்றனர்.

தற்போது வரை இந்தியாவுக்கு4 தங்கம் கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us