விமான எரிபொருள் உற்பத்தி மையமாகும் பெலகாவி குறித்து நிதின் கட்கரி கணிப்பு
விமான எரிபொருள் உற்பத்தி மையமாகும் பெலகாவி குறித்து நிதின் கட்கரி கணிப்பு
ADDED : பிப் 22, 2024 11:26 PM

பெலகாவி: ''பெலகாவி மாவட்டம், எத்னால் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, எதிர்காலத்தில் விமான எரிபொருள் உற்பத்தி மையமாகவும் மாறும்,'' என மத்திய சாலை போக்குவரத்து எட்டு மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தார். இடம்: பெலகாவி. றை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பெலகாவி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், உத்தர கன்னடா, கொப்பால், ராய்ச்சூர், கலபுரகி, பீதர் ஆகிய எட்டு மாவட்டங்ளுக்கு 6,975 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
பின் அவர் பேசியதாவது:
கர்நாடகா மாநிலம் மிகவும் வளமான மாநிலம். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மத்திய அரசு, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
90 சதவீத பணிகள்
மாநிலத்தில் 8,200 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளது. 3 லட்சம் கோடி ரூபாய் செலவில், நெடுஞ்சாலை சீரமைப்பு உட்பட 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.
பெலகாவி - ஹுனகுந்த் - ராய்ச்சூர் வழித்தடத்தில் 9,000 கோடி ரூபாயில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இப்பணி முடிந்த பின், பெலகாவி - ராய்ச்சூர் இடையிலான பயண நேரம் மூன்றரை மணி நேரமாக குறையும்.
பெலகாவி - சங்கேஸ்வர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, ஆறு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதில் அரசு உறுதியாக உள்ளது. வனத்துறையிடம் அனுமதி வழங்குவது, மாநில அரசின் பொறுப்பு.
பெலகாவி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வட்டச்சாலை அமைக்க வேண்டும் என்ற மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடியின் விருப்பம் விரைவில் நிறைவேறும்.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 17,000 கோடி ரூபாய் செலவில் வட்டச்சாலை அமைக்கப்படுகிறது. 2025க்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளது. இது பெங்களூருக்கு மட்டுமல்ல, மாநில மக்களுக்கும் வசதியாக இருக்கும்.
ரூ.3,400 கோடி
பெலகாவி - கோவா பைபாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். இதற்காக, 3,400 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, 17 திட்டங்கள் பொதுப்பணித் துறையிடம் இருந்து கோரப்பட்டு உள்ளன. இவையும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் எத்னால் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கேட்டு கொண்டுள்ளார்.
பெலகாவி மாவட்டம், எத்னால் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, எதிர்காலத்தில் விமான எரிபொருள் உற்பத்தி மையமாகவும் மாறும். இதன் மூலம் பெட்ரோலை விட, குறைந்த விலையில் எத்னால் கிடைக்கும். பெட்ரோலில் எத்னால் சேர்க்கப்படுகிறது. வரும் நாட்களில் டீசலிலும் எத்னால் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய நெடுஞ்சாலை பணிகளை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தார். இடம்: பெலகாவி.