ADDED : அக் 26, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷைலேஷ் குமார் உட்பட, 16 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சித் தலைவரும் பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷைலேஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஷியாம் பகதுார் சி ங், சுதர்ஷன் குமார்.
முன்னாள் எம்.எல்.சி.,க்கள் சஞ்சய் பிரசாத், ரன்விஜய் சிங் உட்பட, 16 நிர்வாகிகளை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந் தும் நீக்கி, அக்கட்சித் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார்.

