ADDED : செப் 05, 2025 01:51 AM
புதுடில்லி:டில்லி மிருகக்காட்சி சாலையில் கடந்த இரண்டு நாட்களாக, புதிதாக எந்த பறவைகளும் இறக்கவில்லை. அந்த வன விலங்குகள் சரணாலயத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சுகாதார நடவடிக்கைகளால், பறவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
டில்லி மிருகக்காட்சி சாலையில் உள்ள இடம்பெயரும் பறவைகள் காப்பகம் மற்றும் குளங்களில், சில பறவைகள் இறந்தன. அவற்றை பரிசோதனை செய்த போது, பேர்டு புளூ என்ற காய்ச்சல் காரணமாக அந்த பறவைகள் இறந்தது தெரிந்தது.
அதையடுத்து, அந்த வன விலங்குகள் சரணாலயத்தை சுற்றிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல வித நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக அந்த வனவிலங்குகள் சரணாலயத்தில் புதிதாக எந்த பறவைகளும் இறக்கவில்லை. எனினும், 24 மணி நேரமும் தொடர்ந்து பறவைகள் கண்காணிக்கப்படுகின்றன என மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் கூறினர்.