UPDATED : பிப் 01, 2026 12:33 PM
ADDED : பிப் 01, 2026 12:31 PM

புதுடில்லி: '' தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றம் இல்லை,'' என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு அளிக்கப்படும். வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமையாகிறது. சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித்தாக்கல் எளிமையாக்கப்படும்.
வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரி சட்டம் அமல்படுத்தப்படும். சிறு வரி செலுத்துவோர் நடைமுறை சிக்கல் தீர்க்கப்படும்
வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய வழங்கப்படும் கால அவகாசம் டிச.,31 முதல் மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும். ஐடிஆர்1 மற்றும் ஐடிஆர் 2 படிவங்களை பயன்படுத்தும் தனி நபர்கள் ஜூலை 31 வரை தாக்கல் செய்யலாம்.
தணிக்கைக்கு உட்படாத வணிகநிறுவனங்கள் அல்லது அறக்கட்டளைகளக்கு ஆக.,31 வரை அவகாசம் வழங்கப்படும். வருமான வரித் தாக்கல் தொடர்பான சிறு குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை இல்லை. வருமான வரி சார்ந்த குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாக இருக்கும்.
அசையா சொத்து விவரங்களை மறைத்தால் அபராதம் . வருமான வரி தாக்கல் செய்யும் போது வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம். வெளிநாட்டு பயண திட்டங்களுக்கான டிசிஎஸ் வரி 20 ல் இருந்து 2 சதவீதமாக குறைப்பு. வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றம் இல்லை என தெரிவித்துள்ளார்..
இதன்படி
ரூ. 4 லட்சம் வரை வரி கிடையாது
ரூ .4 முதல் ரூ .8 லட்சம் வரை : 5 சதவீதம்
ரூ.8 முதல் ரூ .12 லட்சம் வரை: 10 சதவீதம்
ரூ .16 முதல் ரூ .20 லட்சம் வரை : 20 சதவீதம்
ரூ .20 முதல் ரூ .24 லட்சம் வரை: 25 சதவீதம்
24 லட்சத்துக்கு மேல் : 30 சதவீதம் வருமான வரி வரி செலுத்த வேண்டும்.

