எந்த சக்தியாலும் தேர்தலை தடுக்க முடியாது : தேர்தல் ஆணையம் உறுதி
எந்த சக்தியாலும் தேர்தலை தடுக்க முடியாது : தேர்தல் ஆணையம் உறுதி
ADDED : ஆக 09, 2024 07:43 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெறுவதை உள்நாட்டில் மட்டுமல்ல, எந்த வெளிநாட்டு சக்திகளாலும் தடுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வரும் செப்.30-ம் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.
இதையடுத்து தலைமை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் நேற்று (ஆக.08 ) முதல் ஆக10-ம் தேதி வரை 3 நாள் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜிவ் குமார் கூறியதாவது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். இங்கு சட்டசபை தேர்தலை முழு அர்ப்பணிப்புடனும், உறுதியுடனும் நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இத்தேர்தலை சீர்குலைக்க உள்நாட்டில் மட்டுமல்ல, எந்த வெளிநாட்டு சக்திகளாலும் தடுக்க முடியாது.அவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் இத்தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் எந்த சூழ்நிலைகளையும் சமாளிக்க கூடிய வகையில் நமது படைகள் வலுவாக உள்ளன என்றார்.