sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா

/

சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா

சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா

சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா

14


ADDED : ஏப் 03, 2025 12:48 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 12:48 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:


வக்ப் என்பது, முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த சொத்துகளை, மதம் தொடர்பான நல்ல பயன்பாட்டுக்கு தானமாக வழங்குவது. ஆனால், மற்றவர்கள் சொத்துக்களை பறித்துக் கொள்வது வக்ப் சொத்தாக முடியாது.

பல மாநிலங்களில், கோவில் நிலங்கள், கிராமங்கள் என, அனைத்தையும் வக்ப் சொத்தாக மாற்றியுள்ளனர். அரசு நிலங்களை வக்ப் சொத்தாக அபகரித்துள்ளனர். அரசு நிலங்கள், கிராமங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான நிலங்கள் அனைவருக்குமானது. அதற்கு வக்ப் வாரியங்கள் உரிமை கோர முடியாது. அதை மோடி அரசு அனுமதிக்காது.

வக்ப் என்பது ஏழை முஸ்லிம்களின் நலனுக்கானது. திருடுவதற்காக அல்ல. இந்த மசோதா அந்த திருட்டை நிறுத்தும்; மசோதா சொத்துகளை பாதுகாக்கும். தொல்லியல் துறை சொத்துகள், பழங்குடியினர் நிலம், தனியார் நிலம் போல, வக்ப் சொத்துகளை பாதுகாப்பதே இந்த மசோதாவின் நோக்கம்.

தனிநபர்கள், தங்களுக்கு சொந்தமான நிலத்தை மட்டுமே வக்புக்கு நன்கொடையாக வழங்க முடியும். மற்றவர்கள் நிலத்தையோ, அரசு நிலத்தையோ, வக்ப் சொத்தாக அறிவிக்க முடியாது.

இந்த மசோதா குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. ஆனால், இந்த அரசு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லுமே தவிர, ஓட்டு வங்கி அரசியல் செய்ய மாட்டோம்.

வக்ப் வாரியம் என்பது மத அமைப்பு அல்ல, அது ஒரு நிர்வாக அமைப்பு. அதில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த திருத்தம் செய்யப்படுகிறது. மசோதா முன்தேதியிட்டு அமல்படுத்தப்படாது.

வக்பு சொத்துகள் தொடர்பான பதிவுகளுக்கு, கலெக்டர்களே பொறுப்பாளராக இருப்பர் என்பதில் என்ன தவறு உள்ளது. எது அரசு நிலம், எது தனியார் நிலம் என்பதை நிர்வகிப்பது கலெக்டர்களே. வழிபாட்டு தலங்கள் கட்டலாம். ஆனால், அரசு நிலத்தில் எப்படி கட்ட முடியும். அதனால், கலெக்டர்களே பொறுப்பாளர்களாக இருப்பர்.

இந்த மசோதா, பல தரப்பினருடன் ஆலோசிக்கப்பட்டு, பலருடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு, நீண்ட விவாதங்களுக்குப் பிறகே தயாரிக்கப்பட்டுள்ளது. யாருடைய உருட்டல், மிரட்டல்களுக்கு பயந்தோ, அவர்களுடைய ஆதரவு தேவை என்றோ, ஓட்டு வங்கிக்காகவோ இந்த மசோதா தயாரிக்கப்படவில்லை.

நீங்கள் மக்களை ஓட்டுகளாக பார்க்கிறீர்கள். நாங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இந்த மசோதா சட்டமானால், அதை சிறுபான்மையினர் ஏற்க மாட்டார்கள் என ஒரு எம்.பி., கூறினார்.

எந்த சட்டமாக இருந்தாலும், அது அனைத்து மக்களையும் கட்டுப்படுத்தும். பார்லிமென்டால் நிறைவேற்றப்படும் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று எவரும் கூற முடியாது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us