
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் வரை ஓயமாட்டேன்; என் கடைசி மூச்சு உள்ள வரை அரசியலில் தீவிரமாக இருப்பேன். தற்போது சென்னபட்டனத்தில் போட்டியிடும் என் பேரன் நிகில் குமாரசாமிக்காக பிரசாரம் செய்கிறேன்.
தேவகவுடா, மூத்த தலைவர், ம.ஜ.த.,
யார் யோகி?
யோகி என்பவர் எவ்வளவு பெரிய நபராக இருக்கிறாரோ, அவ்வளவு குறைவாக பேசுவார். அவர் பேசுவது பொதுநலன் சார்ந்ததாக இருக்கும். உத்தர பிரதேசத்தில், எல்லாம் எதிர்மறையாக உள்ளது. வாய்க்கு வருவதை எல்லாம் ஒருவர் பேசுகிறார். காவி அணிவதால் மட்டுமே ஒருவர் யோகி ஆகிவிட முடியாது.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
எதுவும் செய்யவில்லை!
கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசுகள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக ராகுல் கூறுகிறார். ஆனால், தெலுங்கானாவில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய், வேலைவாய்ப்பு, தாலிக்கு தங்கம் போன்ற எந்த வாக்குறுதி களையும் காங்., அரசு நிறைவேற்றவில்லை.
கிஷன் ரெட்டி, மத்திய அமைச்சர், பா.ஜ.,