தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ காங்., மீது நம்பிக்கையில்லை!

காங்., மீது நம்பிக்கையில்லை!

காங்., மீது நம்பிக்கையில்லை!


ADDED : டிச 20, 2024 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 11:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்பேத்கர் குறித்த விவகாரத்தை திசை திருப்ப, பா.ஜ., - எம்.பி.,க்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கூறுவது பொய். எங்கள் எம்.பி.,க்கள் எவ்வாறு காயமடைந்தனர் என்பதை அனைவரும் பார்த்தனர். காங்கிரஸ் கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,

கைவிட்டு விட்டனர்!


என்னை போன்று பல எம்.பி.,க்கள் வருத்தத்தில் உள்ளனர். வேலையின்மை, விலைவாசி உயர்வு, மணிப்பூர், சம்பல் வன்முறை என, பார்லிமென்டில் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் பல இருந்தன. ஆனால், பார்லிமென்டின் கடமையை மத்திய அரசு நிறைவேற்ற விடவில்லை.

சசி தரூர், லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

வாய்ப்பு தரவில்லை!


நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் ராஜ்யசபா நடந்த 43 மணி நேரத்தில், 30 சதவீத நேரம் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரே பேசினார். எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கவில்லை. இதன் வாயிலாக அவர் பார்லிமென்டில் புதிய சாதனை படைக்க முயற்சித்து உள்ளார்.

டெரெக் ஓ பிரைன், ராஜ்யசபா எம்.பி., - திரிணமுல் காங்கிரஸ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us