
எஸ்.ஐ.ஆர்., பணி, தேர்தல் கமிஷனின் அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு உட்பட்டது. இது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல; பிரதமர்களாக இருந்த காங்கிரசின் நேரு முதல் மன்மோகன் சிங் காலங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் கமிஷன் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி, எதிர்க்கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.
- நட்டா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
மக்களுக்கு அவமானம்!
பார்லிமென்டில் அறிமுகப்படுத்தும் மசோதாக்களின் தலைப்புகளில் ஹிந்தி வார்த்தைகளை பயன்படுத்தும் மத்திய அரசின் போக்கு அதிகரித்துள்ளது. இது, ஹிந்தி பேசாத மக்களுக்கு ஓர் அவமானம். அத்தகைய மசோதாவை, மக்களால் அடையாளம் காணவோ, உச்சரிக்கவோ முடியாது.
- சிதம்பரம், ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்
சட்ட நடவடிக்கை தேவை!
பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஒரு முஸ்லிம் பெண்ணின் முகத்தில் இருந்த ஹிஜாபை அகற்றிய செயலை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணின் கண்ணியத்தை நிதிஷ் குலைக்க முயன்றதற்கு, பீஹார் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
- இம்ரான் நபி டார், செய்தி தொடர்பாளர், தேசிய மாநாட்டு கட்சி

