
பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி வைத்து முஸ்லிம்களை முதுகில் குத்தி விட்டார். அவர் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். ஆட்சியில் இருந்து அவரை வெளியேற்ற விரும்புகின்றனர். இதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை.
- பிரசாந்த் கிஷோர்,
தலைவர், ஜன் சுராஜ்
பா.ஜ., விரட்டியடிக்கும்!
ஜார்க்கண்டில் உள்ள ஊடுருவல்காரர்களுக்கு, ஓட்டு வங்கி காரணமாக, முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரவு அளித்து வருகிறார். அவர்கள், உள்ளூர் பெண்களை திருமணம் செய்து நிலத்தை அபகரிக்கின்றனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்கள் விரட்டியடிக்கப்படுவர்.
- ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,
மதத்தின் பெயரால் பிளவு!
மதத்தின் பெயரால் நாட்டு மக்களிடையே பா.ஜ., பிரிவினையை உருவாக்குகிறது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு வாக்காளர்கள் ஒற்றுமையாக இருந்து, ஜார்க்கண்டில், 'இண்டி' கூட்டணியை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும். பா.ஜ.,வை விரட்டியடிக்க வேண்டும்.
- தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்