
எ திர்க்கட்சித் தலைவர் ராகுலி ன் பீஹார் யாத்திரை பற்றிய தவறான தகவல்களுடன் கூடிய போலி வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்து உள்ளார். ஓட்டு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாதவர்கள், இப்படிப்பட்ட மலிவான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
மாணிக்கம் தாகூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
பா.ஜ., பயப்படுகிறது!
மத்திய பா.ஜ., அரசுக்கு பேப்பரில் மட்டும் தான் பெரும்பான்மை உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி.,க்கள் எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டியை ஆதரிக்கலாம் என்ற பயம் பா.ஜ.,வுக்கு உள்ளது. எனவே தான் எங்களிடம் ஆதரவு கேட்கிறது.
சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., சிவசேனா உத்தவ் அணி
பா.ஜ.,வின் 'பி டீம்!'
துணை ஜனாதிபதி தேர்தலில் ஆந்திராவைச் சேர்ந்த வேட்பாளரான சுதர்ஷன் ரெட்டியை விடுத்து, பா.ஜ., வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் ஜெகன் மோகன் ஆதரித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் ஒருமுறை பா.ஜ.,வின் 'பி டீம்' என்பதை ஜெகன் நிரூபித்துள்ளார்.
ஷர்மிளா தலைவர், ஆந்திர மாநில காங்கிரஸ்