sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்

/

மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்

மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்

மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்

8


UPDATED : பிப் 08, 2026 09:17 PM

ADDED : பிப் 08, 2026 02:31 PM

Google News

8

UPDATED : பிப் 08, 2026 09:17 PM ADDED : பிப் 08, 2026 02:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: இந்தியாவில் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.



மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டால், அந்த விருதின் மதிப்பு உயரும். இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நமக்கு எந்த வகையிலும் இழப்பை ஏற்படுத்தாது. தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் சித்தாந்தக் கொள்கைகளின் மீதான அர்ப்பணிப்பினாலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறது.

பொது சிவில் சட்டம் அனைவரையும் நம்பிக்கையை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட வேண்டும்; அது கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கக் கூடாது. பாரதத்தை மதமாற்றம் மூலம் சிதைக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். திருமணம் என்பது சமூகக் கடமை ஆகும். குடும்பத்தில், 3 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும். சமூகத்தைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஊடுருவல்காரர்களை அரசு கண்டறியும் முயற்சிகளுக்கு மக்கள் உதவ வேண்டும். மக்கள் அரசின் கண்களாகவும், காதுகளாகவும் இருக்க வேண்டும். உள்ளூர்வாசிகள் சந்தேகத்திற்கிடமான ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆட்சியில் இருப்பவர்கள்தான் அரசை நடத்துகிறார்கள். நாங்கள் திரைக்குப் பின்னால் இருந்து இயக்குவதில்லை. அரசிற்கு எப்போது ஆதரவு தேவைப்பட்டாலும் ஒத்துழைக்க ஆர்எஸ்எஸ் தயாராக இருக்கிறது. தேசத்திற்கான எனது பணி தொடரும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

ஒன்றுபட வேண்டும்!

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்துவரும் வன்முறை குறித்து மோகன் பாகவத் பேசியதாவது: வங்கதேசத்தில் தற்போதைய நிலை பற்றி நாம் அறிந்ததே. அங்கு 1.25 கோடி ஹிந்துக்கள் வசிக்கின்றனர். அவர்கள் தங்களுக்காக போராட தயாராகிவிட்டனர். அவர்கள் அங்கிருந்து ஓடாமல் தங்கள் இடத்திலேயே இருந்து போராட முடிவெடுத்திருப்பது நல்ல விஷயம். அதே சமயம் போராட துணிந்துவிட்டால், ஒற்றுமையாக இருப்பது அவசியம். எனவே அவர்கள் ஒன்றுபட வேண்டும். அப்படி ஒன்றுபட்டால், அங்குள்ள அரசியல் காரணிகளை தங்கள் நலன், பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். அவர்கள் அப்படிப்பட்ட முடிவெடுத்தால், நாம் இங்கிருந்தபடியே என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வோம். உலகெங்கும் உள்ள ஹிந்துக்கள் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வர். அந்த உறுதியை நான் அளிக்கிறேன் என, மோகன் பகவத் பேசினார்.








      Dinamalar
      Follow us