போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் 2 இந்திய நகரங்கள்
போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் 2 இந்திய நகரங்கள்
ADDED : பிப் 04, 2024 11:13 AM

புதுடில்லி: சர்வதேச அளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் பெங்களூரு மற்றும் புனே நகரங்கள் இடம்பெற்றுள்ளன.இங்கிலாந்து தலைநகர் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த டோம் டோம் என்ற தொழில்நுட்ப நிறுவனம் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. 55 நாடுகளின் 387 நகரங்களில் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் செலவு, கார்பன் உமிழ்வு ஆகியவற்றை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கான தகவல்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கார்களில் உள்ள நேவிகேசன் அமைப்பு மூலம் பெறப்பட்டது. இந்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது.
அதில், இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதலிடத்தில் உள்ளது. அயர்லாந்தின் டப்ளின் 2வது இடத்திலும், கனடாவின் டொராண்டோ 3வது இடத்திலும். இத்தாலியின் மிலன் 4வது இடத்திலும் பெரு தலைநகர் லிமா 5வது இடத்திலும் உள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு 6வது இடத்திலும், மஹாராஷ்டிராவின் புனே 7 வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் இந்திய தலைநகர் டில்லி 44வது இடத்திலும், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை 52வது இடத்திலும் உள்ளன.