அஞ்சு தலைநகரம் வேணும்; அடுத்த தேர்தலில் ஒலிவாங்கி இல்லை; ஓங்கி அடித்த சீமான்
அஞ்சு தலைநகரம் வேணும்; அடுத்த தேர்தலில் ஒலிவாங்கி இல்லை; ஓங்கி அடித்த சீமான்
ADDED : செப் 20, 2024 04:28 PM

சிவகங்கை; 2026ம் ஆண்டு தேர்தலில் மைக் சின்னம் கிடையாது, என் இஷ்டப்படி சின்னத்தை மாற்றுவேன் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
கலந்தாய்வு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் மாவட்ட கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்துக்கு முன்னதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது;
திருப்பதி லட்டு விவகாரம் ஒரு பெரிய பிரச்னையே கிடையாது. சாப்பிட்டவர்கள் எல்லாரும் உயிரோடு தானே இருக்கிறார்கள். இதையே ஒரு தேசத்தின் மிக பெரிய பிரச்னையாக கொண்டு போவதா? நாட்டின் பொது பிரச்னை போல கொண்டு போவது சரியில்லை.
கொடுமை
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு இளைஞர்கள் நலன், முன்னேற்றம் என்று பேசுவது ரொம்ப வேடிக்கை. எங்க அப்பாவை குடிக்க வைத்துவிட்டு அம்மாவுக்கு 1000 ரூபாய் கொடுப்பது போன்ற ஒரு கொடுமை நாட்டில் எங்கேயாவது உண்டா?
ஒவ்வொரு சின்னம்
தனித்த தத்துவத்தை கொண்ட ஒருவன் தனித்து தான் தேர்தலில் நிற்க வேண்டும். நாங்கள் படிப்பறிவை விட பட்டறிவு பட்டு கற்றது அதிகம், அதுதான் வலிமையானதும் கூட. ஒவ்வொரு தேர்தலிலும் எங்களுக்கு ஒரு சின்னம் தருகின்றனர். 6 தேர்தலில் விவசாயி சின்னத்தை கொடுத்தனர். திடீரென மைக் சின்னத்தை வைத்துக் கொள்ளும்படி தந்துவிட்டீர்கள். அதை வைத்து மக்களை சந்தித்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்துவிட்டோம்.
தலைநகரை பிரியுங்கள்
2026ம் ஆண்டு தேர்தலில் உறுதியாக மைக் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். வேறு சின்னத்தில் தான் போட்டி. என் எண்ணத்துக்கு ஏற்ற சின்னம். தமிழகத்தின் தலைநகரை 5 ஆக பிரிக்க வேண்டும். மொத்தம் 5 தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறோம். திருச்சியை மையப்படுத்தி அந்நகரத்தை நிர்வாக தலைநகராக மாற்ற வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.