தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தைபயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் அனுமதி

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தைபயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் அனுமதி

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தைபயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் அனுமதி


ADDED : நவ 20, 2024 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 02:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாஸ்கோ, :தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள, நீண்ட துார இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த, தங்கள் ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி அளித்து உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்., 22ல் ரஷ்யா போரைத் தொடர்ந்தது.

போர் துவங்கி நேற்றுடன், 1,000 நாட்களாகின்றன. இந்த போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. இந்நிலையில், தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட, மிக நீண்ட துாரத்தில் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய ஏவுகணைகளை, உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியிருந்தது. ஆனால், இதைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காமல் இருந்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. ஆசிய நாடான வடகொரியாவின் ராணுவத்தினர், ரஷ்யாவுக்கு உதவ வந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.

இதையடுத்து, தான் வழங்கிய நீண்ட துார இலக்குகளை தாக்கக் கூடிய ஏவுகணைகளை, உக்ரைன் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று முன்தினம் அனுமதி அளித்தார். இதற்கு, ரஷ்யா உடனடியாக கண்டனம்

தொடர்ச்சி 9ம் பக்கம்

இந்தியா வருகிறார் புடின்

இந்தியா - ரஷ்யா இடையே நல்ல நட்புறவு உள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பு, கூட்டு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க, இரு நாட்டு தலைவர்களும் ஆண்டுதோறும் சந்தித்து பேசுவர். இந்த சந்திப்பு, இரு நாடுகளிலும் மாறி மாறி நடக்கும். அதன்படி, இந்தாண்டு ஜூலையில் மாஸ்கோவில் நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அடுத்தக் கூட்டத்துக்கு வரும்படி, ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுத்தார்.அதை ஏற்று, அடுத்தாண்டு நடக்கும் கூட்டத்தில் அதிபர் புடின் பங்கேற்பார் என, ரஷ்ய அதிபர் மாளிகை நேற்று தெரிவித்துள்ளது.



ரஷ்யாவை அதிரவைத்த ஏவுகணை

ரஷ்ய ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கை:அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையை, எங்களின் ப்ரயார்க் பிராந்தியத்தின் மீது உக்ரைன் ராணுவம் நேற்று ஏவியது; ஆறு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இவற்றில் ஐந்து ஏவுகணைகளை, நடு வானிலேயே தாக்கி அழித்து விட்டோம். மற்றொரு ஏவுகணையை சேதப்படுத்தி விட்டோம். இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால், உக்ரைன் தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us