UPDATED : ஆக 16, 2024 06:32 AM
ADDED : ஆக 16, 2024 02:43 AM

ராய்ப்பூர் : உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸ் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சட்டிஸ்கரில் நடந்துள்ளது.
உத்தர்கண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த பெண், சட்டிஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 31 ம் தேதியன்று பணி முடிந்து அருகே உள்ள விடுதிக்கு சென்றுக்கொண்டிருந்தார். அதன்பிறகு பணிக்கு வரவில்லை. மாயமானார்.
இது குறித்து அந்த நர்ஸின் சகோதரி , போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி பதிவை வைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆக. 08 ம் தேதி பிலாஸ்பூரில் உள்ள திப்திதா என்ற பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் காணாமல் போன நர்ஸ் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திரா என்ற கூலி தொழிலாளியை பரேலி நகரில் வைத்து கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் நர்ஸை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.
சமீபத்தில் மேற்குவங்கம் கோல்கட்டாவில் இளம் பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் பரபரப்பிற்குள்ளாகியுள்ள நிலையில் நர்ஸ் கொல்லப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.