தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/‘புர்கா’ அணிவதற்கு ஆட்சேபமா? நர்சிங் மாணவியர் போராட்டம்

‘புர்கா’ அணிவதற்கு ஆட்சேபமா? நர்சிங் மாணவியர் போராட்டம்

‘புர்கா’ அணிவதற்கு ஆட்சேபமா? நர்சிங் மாணவியர் போராட்டம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜம்மு: ஜம்மு – காஷ்மீரின் தோடா மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில், நர்சிங் பயின்று வரும் மாணவியர் புர்கா அணிவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாக கூறி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோடா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியின் மகப்பேறு துறை தலைவராக பணியாற்றி வருபவர் டாக்டர் மது சிப். முஸ்லிம்கள், தலை முதல் கால் வரை அணியும் ஆடையான, ‘புர்கா’ அணிந்து, நர்சிங் பயின்று வரும் மாணவி ஒருவர், பிரசவ அறைக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது டாக்டர் மது சிப், ‘புர்கா’ அணிந்து வந்த காரணத்திற்காக, அந்த மாணவியை பிரசவ அறையில் இருந்து வெளியேறுமாறு கூறியதாக சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து டாக்டர் மதுவை கண்டித்து நர்சிங் பயின்று வரும் மாணவியர், மருத்துவப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், பிரச்னை பூதாகரமானதால், மருத்துவமனை நிர்வாகம் தலையிட்டு, மாணவிகளை சமாதானப்படுத்தியது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இது குறித்து, மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இர்பான் தசாதுக் கூறுகையில், ‘‘பிரசவ அறைகள் மற்றும் அறுவை சிகிச்சை அறைகளில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் மிக அதிகம். இதனால், மருத்துவர்கள், செவிலியர் அனைவரும் கடுமையான சுகாதார நெறிகளை பின்பற்றுவது அவசியம். நர்சிங் மாணவியர் தளர்வான உடை அணிந்து வந்ததால், அதை இறுக்கமாக கட்டும்படி டாக்டர் மது அறிவுறுத்தினார். மேலும், அதற்கு மேல், மருத்துவ அங்கியை அணிய வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்,’’ என்றார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து, உண்மை என்னவென்பதை விசாரிக்க மருத்துவமனை நிர்வாகம் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us