தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆபாசமாக பாடியவர் கைது: லாஸ்பேட்டை இ.சி.ஆர் லதா ஸ்டீல் ஹவுஸ் மைதானம் அருகே நேற்று முன்தினம் இரவு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபாசப் பாடல்களைப் பாடிய கிருமாம்பாக்கம் சித்திரைகண்ணன், 41; என்பவரை லாஸ்பேட்டை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கைது செய்தார்.

மிரட்டியவர் கைது: கதிர்காமம், தட்சிணாமூர்த்தி நகர், புத்து மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்களை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பூமியன்பேட்டை ஏழுமலை, 24, என்பவரை டி.நகர் சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி கைது செய்தார். அவரிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

ரகளை செய்த இருவர் கைது: கனகன் ஏரி அருகே நேற்று முன்தினம் ரகளை செய்த அண்ணா நகர் பாலாஜி, 45; பவழ நகர் மயானம் அருகே ரகளையில் ஈடுபட்ட மூலக்குளம் செந்தில்குமார், 38, ஆகியோரை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரதாபன் கைது செய்தார்.

ஈவ்டீசிங் செய்த வாலிபர் கைது: புதுச்சேரி மகாத்மா காந்தி ரோடு – செட்டி தெரு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு, அவ்வழியாகச் சென்ற இளம் பெண்களை பார்த்து ஆபாச சைகைகள் செய்து வம்புக்கு இழுத்த முத்தியால்பேட்டை லவகுசா, 21, என்பவரை பெரியக்கடை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் கைது செய்தார்.

5 பேர் மீது வழக்கு பதிவு: பெரியகாலாப்பட்டு சிங்காரவேலரார் தெருவில் வசிக்கும் சீதாலட்சுமி என்பவரை, கடந்த மாதம் 27ம் தேதி இரவு பெரியகாலாப்பட்டு குப்பத்தைச் சேர்ந்த புனிதா, ஜெயமூர்த்தி, செல்வி, விஜி மற்றும் சிலம்பு ஆகியோர் ஆபாசமாக திட்டி, மிட்டினர்.

புகாரின் பேரில், புனிதா உட்பட 5 பேர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உரிமையாளர் கைது: உருளையன்பேட்டை யோகா இன் கெஸ்ட் ஹவுஸ் அருகே உள்ள விஷ்ணு ஸ்டோரில் நேற்று மதியம் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்த, சுப்பையா நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் ராஜேஷ் கண்ணா 55, என்பவரை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கைது செய்தார்.

கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதையில் ரகளை: 5 பேர் கைது: வில்லியனுார் அசோக் தியேட்டர் அருகே நேற்று முன்தினம் இரவு பொதுமக்களுக்கு இடையூறு செய்த விழுப்புரம் மாவட்டம், பெரம்பையைச் சேர்ந்த கலைவாணன், 21, என்பவரை சிறப்பு உதவி உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராசு கைது செய்தார்.

அதேபோல், வில்லியனுார் பனகல் பார் அருகே போதையில் ரகளையில் ஈடுபட்ட வில்லியனுார் அஜித், 26; தொண்டமாநத்தம் கார்த்திக், 25; முதலியார்பேட்டை விசுவநாதன், 40; வில்லியனுார் அய்யனார், 42, ஆகியோரை சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் கைது செய்தார்.

ஏனாமில் ஒருவர் கைது: ஏனாம் பைபாசில் உள்ள பாலயோகி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு போதையில் பொதுமக்களிடம் ரகளையில் செய்த, கனகலாபேட்டை சேர்ந்த நுன்னா வீராஞ்சநேயுலு, 27, என்பவரை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு கைது செய்தார்.

காரைக்காலில் ஒருவர் கைது: காரைக்கால், நிரவி, விழிதியூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சண்முக பெருமாள் என்பவரை போதையில் ஆபாசமாக திட்டி மிரட்டிய நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி கணேசன் 55, என்பவரை நிரவி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us