ஆபாச கேள்வி கேட்ட வழக்கு: யு -டியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு பார்லி., குழு சம்மன்
ஆபாச கேள்வி கேட்ட வழக்கு: யு -டியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு பார்லி., குழு சம்மன்
ADDED : பிப் 11, 2025 07:37 PM

மும்பை: ஆபாச கேள்வி கேட்ட பிரபல யுடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் இன்று பாராளுமளன்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு குழு சம்மன் அனுப்பியுள்ளது.
'இந்தியா காட் லேட்டன்ட்' என்ற பெயரில், சமூக வலைதளமான யு டியூபில் சமீபத்தில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில், பிரபல யு டியூபர் ரன்வீர் அல்லாபாடியா, நடுவர்களில் ஒருவராக பங்கேற்றார். அப்போது, போட்டியாளர் ஒருவரிடம் அருவருக்கத்தக்க வகையில் அவர் கேள்வி கேட்டார்.
இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரானது. ரன்வீர் அல்லாபாடியாவுக்கு கண்டனம் தெரிவித்த பயனர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர் மீது, ஏற்கனவே அசாமில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருடன் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்ற ஆஷிஷ் சஞ்ச்லானி, ஜஸ்ப்ரீத் சிங், அபூர்வா மகிஜா, சமய் ரெய்னா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று பாராளுமன்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு குழு ரன்வீர் அல்லாபாடியாவுக்கு சம்மன் அனுப்பி குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தவிர தேசிய மகளிர் ஆணையம் கொடுத்த புகாரின் பேரில் பேரில் ரன்வீர் அல்லாபாடியா மீது பாரதிய நீதி சட்டத்தின்-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.