ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு
UPDATED : மே 02, 2024 08:40 PM
ADDED : மே 02, 2024 08:32 PM

புவனேஸ்வரம்: ஒடிசா சட்டசபை தேர்தலையொட்டி கண்டபான்ஜி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் அம்மாநில ஆளும் பிஜூ ஜனதா தள தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக்.
லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஓடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
இங்கு நான்கு கட்டங்களாக சட்டசபைக்கும், லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக மே.13-ம் தேதி நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி தலைவரும் முதல்வருமான நவீன்பட்நாயக், இன்று போலான்கிர் மாவட்டம் கண்டபான்ஜி சட்டசபை தொகுதியில் போட்டியிட வேண்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக நவீன்பட்நாயக்,கடந்த ஏப்ரல் 30-ம் தேதி கஞ்சம் மாவட்டம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியிலும வேட்புமனு தாக்கல் செய்ததுடன் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

