ADDED : மார் 24, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாரத்தஹள்ளி: மாரத்தஹள்ளியில் உள்ள சில இடங்களில் கஞ்சா விற்கப்படுவதாக மாரத்தஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா வியாபாரம் செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த துர்கா பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 4.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிசாவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இவர் மீது, இதுவரை எந்த வழக்கும் பதிவாகவிலை என போலீசார் கூறினர்.