காசு முக்கியம் குமாரு! கிரிக்கெட்டில் மட்டுமில்லை கெட்டிக்காரத்தனம்!
காசு முக்கியம் குமாரு! கிரிக்கெட்டில் மட்டுமில்லை கெட்டிக்காரத்தனம்!
ADDED : ஆக 25, 2024 09:41 AM

புதுடில்லி: கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் மட்டும் அல்லாமல், வெளியேயும் ஆட்டத்தை சிறப்பாக ஆடுகின்றனர். தோனி, விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், லாபம் தரும் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்து சம்பாதிக்கின்றனர்.
கிரிக்கெட் போட்டிகளின் மூலம் சம்பாதித்த பணத்தை, வெவ்வேறு வகையில் முதலீடு செய்து, நல்ல லாபம் பார்க்கின்றனர் வீரர்கள். பலரும், நல்ல லாபம் கிடைக்கக்கூடிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தேடித்தேடி முதலீடு செய்கின்றனர்.
சச்சின் டெண்டுல்கர்
ஆன்லைன் டு ஆப்லைன் வரை கார் விற்பனை செய்து வரும் ஸ்பின்னி நிறுவனத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் கூட்டாளியாகி ஆகியுள்ளார். பிராண்டிற்குள் இருக்கும் நம்பிக்கை, வெளிப்படைத் தன்மையுடன் ஸ்பின் நிறுவனம் செயல்பட்டு வருதாக, சச்சின் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். ஸ்போர்ட்ஸ் ஷூ ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் சச்சின் முதலீடு செய்துள்ளார்.
விராட் கோஹ்லி
விளையாட்டு ஆடை பிராண்டான ஒன்ஸ்8 நிறுவனத்தில் விராட் கோஹ்லி முதலீடு செய்துள்ளார். அவர், சிறந்த பேஷன் பிராண்டுகளில் ஒன்றான wrogn நிறுவனத்திலும், rage coffee என்ற நிறுவனத்திலும் பங்குதாரர் ஆக உள்ளார். விராட் கோஹ்லி இனி வருங்காலங்களில் ஸ்டார்ப் அப் நிறுவனங்களில் தான் வளர்ச்சி இருக்கும் என்பதை கணித்து முதலீடு செய்துள்ளார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
தோனி
தோனி நகை தயாரிப்பு நிறுவனமான புளூஸ்டோனில் பங்குகளை வாங்கியுள்ளார். சென்னையை தளமாக கொண்ட ட்ரோன் ஸ்டார்ட் அப் கருடா ஏரோஸ்பேஸில் பிராண்ட் அம்பாசிடராக சேர்ந்துள்ளார்.
இந்த நிறுவனம் பேரிடர் மேலாண்மை மற்றும் விவசாய பயன்பாடுகளுக்கு ட்ரோன்களை தயாரித்து விற்பனை செய்கிறது. ட்ரோன் உருவாக்குவதில் இந்த நிறுவனம் கில்லி என்றே சொல்லலாம். ட்ரோன் ஸ்டார்ட் அப் கருடா நிறுவனத்தை தெரியாத ஆளே கிடையாது.
ரோகித் சர்மா
கல்வியின் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்டார்ப் அப் லியோ1ல் முதலீடு செய்துள்ளார். அனைவருக்கும் கல்வி கற்கும் வசதி கிடைக்க வேண்டும். கற்றலில் புரட்சியை ஏற்படுத்தவும் முதலீடு செய்துள்ளதாக ரோகித் கூறியுள்ளார். வெல்நெஸ், rapidobotics நிறுவனத்திலும் முதலீடு செய்து பங்குதாரர் ஆக உள்ளார்.
ஹர்திக் பாண்டியா
கடன் வழங்கும் செயலியான lendenclup நிறுவனத்தில் ஹர்திக் பாண்டியா முதலீடு செய்துள்ளார். இந்தியாவில் குழந்தைகளின் காலணிகளை உருவாக்கும் முன்னோடி நிறுவனமான Arettoவில் முக்கிய பங்குதாரர் ஆக உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பூமா இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த அபிஷேக் கங்குலியால் நிறுவப்பட்ட விளையாட்டு தடகள நிறுவனமான அகிலிடாஸ் ஸ்போர்ட்ஸில் பங்குகளை வைத்துள்ளனர்.

