மாநில அந்தஸ்திற்காக ஒமர் அப்துல்லா சுறுசுறுப்பு: நேற்று அமித்ஷா: இன்று மோடி
மாநில அந்தஸ்திற்காக ஒமர் அப்துல்லா சுறுசுறுப்பு: நேற்று அமித்ஷா: இன்று மோடி
ADDED : அக் 24, 2024 08:12 PM

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக டில்லியில் முகாமிட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடுகட்சி முதல்வர் ஒமர் அப்துல்லா , நேற்று (அக்.23)மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இன்று (அக்.24) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைபிடித்தது. ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார்
.பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து நேற்று (அக்.23) டில்லி சென்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க தன் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மான நகலையும், துணை நிலை கவர்னர் அளித்த ஒப்புதல் நகலையும் வழங்கினார்.
இன்று (அக். 24) பிரதமர் மோடியை சந்தித்து தேர்தலுக்கு முன் பா.ஜ., அறிவித்துள்ளபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். முன்னர் இருந்த நிலைமை மீண்டும் தொடர வேண்டும் உள்ளிட்ட அதே கோரிக்கையை வலியுறுத்தினார்.