தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஓம்பிர்லா எதிர்ப்பு

ஓம்பிர்லா எதிர்ப்பு

ஓம்பிர்லா எதிர்ப்பு


ADDED : ஜூலை 30, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராகுல் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென ஒரு புகைப்படத்தை கையில் எடுத்தார். அதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு ராகுல், “நான் என்ன புகைப்படம் காட்டப்போகிறேன் என்பதற்கு முன்பாகவே, அது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக 'டிவி' ஆப் செய்கிறீர்கள்,” என்றார். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.

பின்னர் ராகுல் பேசுகையில், “இது பட்ஜெட் தயாரிப்புக்காக அல்வா கிண்டியபோது எடுத்த புகைப்படம். அதில், உள்ளவர்களில் ஒருவர்கூட பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களோ, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களோ இல்லை. நாட்டிற்காக அல்வா கிண்டி தயாரிக்கப்படுகிறது. 75 சதவீதம் பேர் ஏழைகள்.

''அவர்களுக்கு அல்வா இல்லையா. இந்த நாட்டிற்கான அல்வாவை, வெறும் 20 சதவீதம் பேர் பகிர்ந்து கொண்டால் எப்படி சரி,” என்றார். இதைக் கேட்டதும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தலையில் கை வைத்தபடி முகத்தை மூடிக் கொண்டு சிரித்ததை பார்க்க முடிந்தது.

புகைப்படத்தால் சலசலப்பு



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us