ADDED : ஆக 26, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பாலக்காடு அருகே சேற்று நீரில் ரேக்ளா போட்டி கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் தோணிப்பாடம் என்னுமிடத்தில், மத நல்லிணக்க விவசாய சங்கம் மற்றும் கோணிப்பாடம் இளைஞர் குழு ஒருங்கிணைந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு, முகமதுகுட்டி குருக்கள் மைதானத்தில் 'காளைபூட்டு' என்ற ரேக்ளா போட்டி நடந்தது.
ஜூனியர், சப்ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில், 72க்கும் மேற்பட்ட காளை மாடுகள் ஜோடிகளாக போட்டியில் பங்கேற்றன. மாவேலி மன்னர் வேடமணிந்து போட்டியிட்ட வீரர், சீரிய காளைகளுடன் பாய்ந்து சென்றது காண்பவரை கவர்ந்தது. குறுகிய நேரத்தில் இலக்கில் எட்டும் பல்வேறு பிரிவு காளை ஜோடிகளுக்கு, பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.