ஒரே நாடு ஒரே தேர்தல்: பார்லி., கூட்டுக்குழுவில் யார் யார்?
ஒரே நாடு ஒரே தேர்தல்: பார்லி., கூட்டுக்குழுவில் யார் யார்?
UPDATED : டிச 18, 2024 10:26 PM
ADDED : டிச 18, 2024 10:00 PM

புதுடில்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் இடம்பெறும் எம்.பி.,க்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், விதிப்படி ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக 269 பேர், எதிர்த்து 198 பேர் ஓட்டளித்தனர். பின், ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
இக்குழுவில் மொத்தம் 31 பேர் இடம்பெற முடியும். 21 பேர் லோக்சபாவில் இருந்தும், 10 பேர் ராஜ்யசபாவில் இருந்தும் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்நிலையில், இக்குழுவில் இடம்பெறும் லோக்சபா எம்.பி.,க்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி
1. பி.பி.சவுத்ரி( பா.ஜ.,)
2. சி.எம்.ரமேஷ்( பா.ஜ.,)
3. பன்சுரி சுவராஜ் ( பா.ஜ.,)
4. பர்ஷோத்தம் பாய் ரூபாலா ( பா.ஜ.,)
5. அனுராக் சிங் தாக்கூர் ( பா.ஜ.,)
6. விஷ்ணு தயால் ராம் ( பா.ஜ.,)
7. பர்த்ருஹரி மஹ்தாப் ( பா.ஜ.,)
8. சம்பித் பத்ரா ( பா.ஜ.,)
9. அனில் பலுனி ( பா.ஜ.,)
10. விஷ்ணு தத் சர்மா ( பா.ஜ.,)
11. பிரியங்கா (காங்.,)
12. மணிஷ் திவாரி (காங்.,)
13. சுக்தியோ பகத் (காங்.,)
14. தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி)
15. கல்யாண்பானர்ஜி ( திரிணமுல் காங்.,)
16. டி.எம்.செல்வகணபதி (தி.மு.க.,)
17. ஹரிஸ் பாலயோகி (தெலுங்கு தேசம்)
18. சுப்ரியா சுலே ( தேசியவாத காங்., சரத் சந்திரபவார் பிரிவு)
19. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ( சிவசேனா)
20. சந்தன் சவுகான் (ராஷ்ட்ரீய லோக் தளம்)
21. பாலாஷவுரி வல்லபனேனி ( ஓய்.எஸ்.ஆர்., காங்.,) ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இக்குழுவானது ஆய்வுக்கு பிறகு அடுத்த கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இக்குழுவில் இடம்பெறப்போகும், எம்.பி.,க்களின் பெயர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.