
மஹாராஷ்டிராவில், ஆளுங்கட்சி நான்கு மாதத்திற்குள் எப்படி இவ்வளவு சீட்டுகளை வென்றது. இந்த வெற்றிக்கு பின்னால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ., தலைவர் நட்டா, நாட்டில் ஒரு கட்சி தான் இருக்கும் என்றார். அதை நோக்கி தான் அவர்கள் செல்கின்றனர்.
உத்தவ் தாக்கரே, தலைவர், சிவசேனா உத்தவ் அணி
இடைத்தேர்தலில் போட்டியில்லை!
உ.பி.,யில் நடந்த ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், கள்ள ஓட்டுகள் பதிவானதாக மக்கள் கூறுகின்றனர். இதற்கு எதிராக தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்கும் வரை, நாட்டில் நடக்கும் எந்த இடைத்தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம். குறிப்பாக, உ.பி.,க்கு இது பொருந்தும்.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
அதிர்ச்சியை தந்தது!
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை தந்தன. இதை நம்ப முடியவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் தோல்வி மட்டுமல்ல. சரத் பவார், உத்தவ் கட்சிகள் வலுவாக இருந்த இடங்களிலும் தோற்றுள்ளன. இது ஒட்டுமொத்தமாக மஹா விகாஸ் அகாடியின் தோல்வி. என்ன நடந்தது என ஆராய்கிறோம்.
கே.சி.வேணுகோபால், பொதுச்செயலர், காங்கிரஸ்