ஒருநாள் சம்பளம் ரூ.48 கோடி: அசத்தும் இந்திய சி.இ.ஓ., ஜக்தீப் சிங்கின் ஆண்டு சம்பளம் ரூ.17,500 கோடி
ஒருநாள் சம்பளம் ரூ.48 கோடி: அசத்தும் இந்திய சி.இ.ஓ., ஜக்தீப் சிங்கின் ஆண்டு சம்பளம் ரூ.17,500 கோடி
ADDED : ஜன 05, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உலகிலேயே அதிக ஊதியம் பெறும் ஊழியர் குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜக்தீப் சிங் என தெரிய வந்துஉள்ளது.
வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு சந்தை யில் 'அதிக ஊதியம் பெறும் வேலை' என்பதன் வரையறை, பாரம்பரிய பெருநிறுவனங்களின் நிர்வாகத் துறையினருக்கு அப்பால் விரிவடைந்துஉள்ளது.
அந்த வகையில், ஜக்தீப் சிங் உலகின் அதிக ஊதியம் வாங்கும் ஊழியராக உருவெடுத்தார்.
அவரது ஆண்டு வருமானம், 17,000 கோடி ரூபாயாக உயர்ந்து,ஒரு நாளைக்கு சராசரியாக 48 கோடி ரூபாயாக உள்ளது.
தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து கடந்தாண்டு தன்னை விடுவித்துக் கொண்ட சிங், தற்போது அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்கிறார்.

