ஆயுத கும்பல் தாக்கி ஒருவர் பலி: மேகாலயாவில் 4 பேர் கைது
ஆயுத கும்பல் தாக்கி ஒருவர் பலி: மேகாலயாவில் 4 பேர் கைது
ADDED : ஆக 09, 2025 09:58 PM

ஷில்லாங்: மேகாலயா எல்லையில் ஆயுதமேந்திய கும்பல் தாக்கி ஒருவர் பலியான சம்பவத்தில் 4 பேரை பொலீசார் கைது செய்துள்ளனர்.
மேகாலயாவின் தென்மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் ஆயுதமேந்திய கும்பலை தடுக்க முயன்றவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி உபாதயா கூறியதாவது:
வங்கதேச எல்லைக்கு அருகிலுள்ள நோங்ஜ்ரி-நோங்ஹில்லம் துறையின் கீழ் உள்ள ரோங்டோங்காய் கிராமத்தில், துப்பாக்கி உட்பட ஆயுதங்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் கொண்ட குழு, நேற்று இரவில் சட்டவிரோதமாக இந்தியப் பகுதிக்குள் நுழைந்தது. இந்த கும்பலால், பால்ஸ்ராங் ஏ.மரக் என அடையாளம் காணப்பட்டவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். அவரை தாக்கிய அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் அவர்கள் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
சம்பவ இடத்தில் வங்கதேச நாணயத்தாள்கள், வாக்கி-டாக்கிகள் மற்றும் சார்ஜர்கள் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் வங்கதேச காவல்துறைக்கு சொந்தமான அடையாள அட்டை ஆகிய பொருட்கள் மீட்கப்பட்டன.
தாக்குதல் நடத்தியவர்களுக்கு எல்லையைத் தாண்டிய சட்ட அமலாக்கப் பிரிவுகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்க வழிவகுத்துள்ளது.
இந்தக் குழு உள்ளூர் மக்களை மீட்கும் நோக்கில் உள்ளே நுழைந்திருக்கலாம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சம்பவம் தொடர்பாக,உள்ளூர்வாசிகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு உபாதயா கூறினார்.