ADDED : செப் 28, 2025 07:00 AM

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரின் பிப்ரைச் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குப்தா, 19; நீட் பயிற்சி மாணவர். இவர் கடந்த 16ல் தன் ஊரில் இருந்த போது மாடு திருடும் கும்பல் லாரியில் வந்தது.
இதை அறிந்த அவர் தனி ஆளாக அவர்களை தடுக்க முயன்றார். மாணவனை மாடு திருடும் கும்பல் தங்கள் லாரியில் ஏற்றிச் சென்று, வாயில் சுட்டுக் கொன்றது; அத்துடன் நிற்காமல் உடலை சாலையில் வீசி, தலை மீது லாரியை ஏற்றி சிதைத்துவிட்டு சென்றது.
இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜுபைர் அலி, 26, என்ற நபரை போலீசார் தேடி வந்தனர். அவர் மீது, பல மாவட்டங்களில் பசு வதை, கொலை முயற்சி, கொலை உட்பட 18 வழக்குகள் உள்ளன. அவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, 1 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, ராம்பூர் மாவட்டத்தில் ஜுபைரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜுபைர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசார் சுட்டதில் அவர் பலியானார்.