ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம்: ராஜஸ்தான் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம்: ராஜஸ்தான் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
UPDATED : டிச 06, 2024 10:26 PM
ADDED : டிச 06, 2024 10:23 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள கோவில் ஒன்றில் ஒரு கிலோ தங்க பிஸ்கட் ரூ.23 கோடி ரொக்கம் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோகர் மாவட்டத்தில் சன்வாலியா சேத் என்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற இக்கோவிலில் உள்ள உண்டியல் நிரம்பியது. இதனையடுத்து காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, ரூ.23 கோடி காணிக்கை ரொக்கம், ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட், வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி, வெள்ளியால் செய்யப்பட்ட கைவிலங்கு ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தியது தெரியவந்துள்ளது.
சிறிய அளவிலான தங்க பிஸ்கட்களையும் வெள்ளியால் ஆன பொருட்களையும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி உள்ளனர். இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.