தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உறுப்பு மாற்று ஆப்பரேஷனுக்கு ஒரு லட்சம் பேர் காத்திருப்பு

உறுப்பு மாற்று ஆப்பரேஷனுக்கு ஒரு லட்சம் பேர் காத்திருப்பு

உறுப்பு மாற்று ஆப்பரேஷனுக்கு ஒரு லட்சம் பேர் காத்திருப்பு


UPDATED : நவ 27, 2026 07:58 PM

ADDED : நவ 27, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 07:58 PM ADDED : நவ 27, 2026 07:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: நம் நாட்டில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் அதிக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யும் நாடுகளில், 49,920 அறுவை சிகிச்சைகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா 25,800 அறுவை சிகிச்சைகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இந்த வரிசையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

நம் நாட்டில் கடந்த 5ம் தேதி நிலவரப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 1 லட்சத்து 5 ஆயிரத்து 437 பேர் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு நோயாளி உறுப்புக்கான காத்திருப்புப் பட்டியலில் இணைகிறார்.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் இயக்குனர் டாக்டர் அனில் குமார் கூறியதாவது:

ஆண்டுதோறும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை 1.75 லட்சம் – 2 லட்சம் வரை உள்ளது. நவம்பர் 5 ம் தேதி நிலவரப்படி, 80 ஆயிரம் நோயாளிகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் இருந்தனர். 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகவும், 1,931 நோயாளிகள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் காத்திருந்தனர்.

நம் நாட்டில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. கடந்த ஆண்டில், பத்து லட்சம் பேருக்கு 0.87 பேர் என்ற விகிதத்தில் தான் இறந்தவர்களிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இது, ஸ்பெயினில் 50 ஆகவும், அமெரிக்காவில் 40 ஆகவும் உள்ளது.

நம் நாட்டில் நடப்பாண்டில் நவம்பர் 5ம் தேதி வரை, 20 ஆயிரத்து 138 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் உயிருடன் இருப்பவர்களிடம் தானமாக பெறப்பட்டு 16 ஆயிரத்து 612 சிகிச்சைகளும், 3 ஆயிரத்து 526 சிகிச்சைகள் இறந்தவர்களிடம் இருந்து உறுப்புகள் பெற்றும் மேற்கொள்ளப்பட்டன.

இறந்தவர்களிடம் இருந்து உறுப்பு தானம் பெறுவதில், கடந்த ஆண்டில் 266 தானங்களுடன் தமிழகம் முதலிடம் பிடித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us