தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த 5 பேர் கைது

ரகளை செய்த 5 பேர் கைது

ரகளை செய்த 5 பேர் கைது


ADDED : நவ 27, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 07:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று (நவ.,26) பிப்டிக் தொழிற்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு ஐ.டி.ஐ., பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்திரைப்பாளையம் விஜயன் மகன் சிவா,23, என்பவரை கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று உழவர்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அந்தோணியார் கோவில் அருகில் குடிபோதையில் ரகளை செய்த அனந்தபுரம் ஸ்டீபன்ராஜ்,35; என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

காலாப்பட்டு போலீசார் நேற்று சின்னகாலாப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இ.சி.ஆரில் பொது இடத்தில் தகராறு செய்த கடலுார், சேடப்பாளையம் ஆனந்த்,32; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

வில்லியனுார் போலீசார் நேற்று கூடப்பாக்கம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தனியார் பார் அருகில் ரகளையில் ஈடுபட்ட சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மாகே போலீசார் நேற்று புல்வார்ட் பகுதியில் ரோந்து பணியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த கேரளம் காசர்கோடு பகுதியை சேர்ந்த மகேஷ்,51; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us