தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரிக்கு கூடுதல் மின்சாரம்: மத்திய அமைச்சரிடம் நமச்சிவாயம் கோரிக்கை

புதுச்சேரிக்கு கூடுதல் மின்சாரம்: மத்திய அமைச்சரிடம் நமச்சிவாயம் கோரிக்கை

புதுச்சேரிக்கு கூடுதல் மின்சாரம்: மத்திய அமைச்சரிடம் நமச்சிவாயம் கோரிக்கை


UPDATED : நவ 27, 2026 07:46 PM

ADDED : நவ 27, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 07:46 PM ADDED : நவ 27, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கூடுதலாக 50 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தினார்.

புது டில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார். மாநாட்டின்போது மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த அவர், புதுச்சேரி மின் தேவையை விளக்கி மனு ஒன்றை அளித்தார்.

மனுவில், புதுச்சேரியில் வீட்டு உபயோகம், வணிகம், தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள் விரிவடைந்து வருவதால் மின்சார நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலங்களுக்கு இடையேயான மின் கடத்தல் அமைப்பின் கீழ், புதுச்சேரிக்கு 540 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நடப்பு 2026–27 நிதியாண்டிலேயே புதுச்சேரியின் மின் தேவை 588 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது ஒதுக்கப்பட்ட அளவை விட 48 மெகாவாட் அதிகமாகும்.

ஏற்கனவே புதுச்சேரிக்கு 540 மெகாவாட்டில் இருந்து 620 மெகாவாட்டாக அதாவது கூடுதலாக 80 மெகாவாட் மின்சாரத்தை உயர்த்தி வழங்க மத்திய மின் கடத்தல் பயன்பாட்டு நிறுவனம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக நாகப்பட்டினம் துணை மின் நிலையத்திலிருந்து புதுச்சேரியில் உள்ள நான்கு துணை மின் நிலையங்களுக்கு 230 கி.வோ., உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் முடிந்து 2028-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தான் அந்தக் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.

இப்பணிகள் நிறைவடையும் வரை இடைக்கால ஏற்பாடாக, 2027-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதுச்சேரிக்குக் கூடுதலாக 50 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்.

இதற்காக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு மூலம் கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us