புதுச்சேரி பல்கலை மேலாண்மை கல்வி பள்ளி நிறுவன நாள்
புதுச்சேரி பல்கலை மேலாண்மை கல்வி பள்ளி நிறுவன நாள்
UPDATED : நவ 27, 2026 07:46 PM
ADDED : நவ 27, 2026 07:46 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை கல்வி பள்ளியின் 41ம் ஆண்டு நிறுவன நாள் விழா, பள்ளி அரங்கில் கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியும், அவ்தார் குழுமத்தின் தலைவர் சவுந்தர்யா ராஜேஷ் பங்கேற்று, பேசினார். மேலாண்மை கல்வி பள்ளியின் முதல்வர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவின் ஒரு பகுதியாக, தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கில் நடத்தப்படும் 'கார்னிஷிங் டேலன்ட்' நிகழ்ச்சியின் 8வது பதிப்பிற்கு மேலாண்மை கல்விப் பள்ளி தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதற்காக, ஈட்டன் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழை மேலாண்மை கல்வி பள்ளியின் புல முதல்வருக்கு துணை வேந்தர் வழங்கி கவுரவித்தார்.
பின், மேலாண்மை கல்வி பள்ளி மாணவர் அபய் சந்திரனுக்கு பணி ஆணையினை வழங்கினார். விழாவில் முன்னாள் துணை வேந்தர்கள், புல முதல்வர்கள், பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
