sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி: அமித்ஷா உறுதி

/

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி: அமித்ஷா உறுதி

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி: அமித்ஷா உறுதி

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி: அமித்ஷா உறுதி

6


ADDED : ஏப் 01, 2025 07:45 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 07:45 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹிசார்: நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலை உருவாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிசாரில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிலை திறப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

10 ஆண்டுகளில் அனைத்து துறைகளில் முன்னேற்றங்களை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்து, நடைமுறைப்படுத்தி உள்ளது, நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பாக நாடு முழுவதும் 7 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இதில் 6 கல்லூரிகள் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் உருவாக்கப்பட்டவை. தற்போது 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் உள்ளன.

தற்போது நாட்டில் 750 மாவட்டங்களில் 766 மருத்துவமனைகள் இருக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு, 20 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us