ADDED : மே 20, 2025 06:46 AM
புதுடில்லி:தென்கிழக்கு டில்லியில் வாலிபரை சுட்டுக் கொலை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கிலோகரி கிராமத்தில் வசித்தவர் அடில், 26. நேற்று முன்தினம் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த சன்லைட் காலனி போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அடிலை துப்பாக்கியால் சுட்ட, புதுடில்லி சாராய் காலே கான் பகுதியைச் சேர்ந்த ரெஹான், பைசல் மற்றும் சன்லைட் காலனியைச் சேர்ந்த சபேல் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூவரிடமும் விசாரணை நடக்கிறது.