ஓராண்டு முதுகலை படிப்பு டில்லி பல்கலையில் அறிமுகம்
ஓராண்டு முதுகலை படிப்பு டில்லி பல்கலையில் அறிமுகம்
ADDED : டிச 20, 2024 10:33 PM
புதுடில்லி:தேசிய கல்விக் கொள்கைப்படி, டில்லி பல்கலையில் ஓராண்டு முதுகலை படிப்பு அடுத்த அறிமுகம் செய்யப்படுகிறது.
டில்லி பல்கலை கல்வி கவுன்சில் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், தேசியக் கல்விக் கொள்கைப்படி ஓராண்டு முதுகலை படிப்பு அறிமுகம் செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கு சில பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டில்லி பல்கலையில் ஏற்கனவே, நான்கு ஆண்டு இளங்கலைப் பட்டப் படிப்பு நடைமுறையில் உள்ளது. தற்போது மூன்றாவது செமஸ்டர் நடைக்கிறது.
இந்த திட்டத்தில், இரண்டாம் ஆண்டுக்குப் பின், வெளியேறும் மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டு படிப்பை முடித்தோருக்கு பட்டப் படிப்பு சான்றிதமும், நான்காம் ஆண்டை நிறைவு செய்வோருக்கு ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்குப் பின், மாணவர்கள் இரண்டாண்டு முதுகலை படிப்பைத் தேர்வு செய்யலாம். நான்கு ஆண்டுகள் படித்தவர்கள் ஓராண்டு முதுகலை படிப்பில் சேரலாம்.
இந்த ஓராண்டு முதுகலைப் படிப்பை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய டில்லி பல்கலை முடிவு செய்துள்ளது.
ஓராண்டு மற்றும் இரண்டாண்டு முதுகலைப் படிப்புக்கு தனித்தனி பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

