ADDED : அக் 12, 2024 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னபூர்னேஸ்வரி: பெங்களூரின் அன்னபூர்னேஸ்வரி நகரில் வசிப்பவர் பரத், 32. இவர் வங்கியில் வேலை செய்கிறார். இவரது மனைவி சைத்ரா, 28. பரத் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானார். இதற்காக வங்கியில், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கடன் வாங்கினார்.
கடன் அதிகரித்ததால், தவணை கட்ட முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மனம் நொந்த பரத், வீட்டை விட்டு வெளியேறினார்.
அதற்கு முன்பு மொபைல் போனில், செல்பி வீடியோ பதிவு செய்த அவர், 'நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். வீட்டை விட்டுச் செல்கிறேன். என்னை தேடாதீர்கள்' என கூறிவிட்டு, மொபைல் போனை வீட்டிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
கணவரை பல இடங்களில் தேடிய சைத்ரா, அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.