sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் புஸ்...!: மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றி

/

இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் புஸ்...!: மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றி

இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் புஸ்...!: மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றி

இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் புஸ்...!: மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றி


ADDED : நவ 23, 2024 11:02 PM

Google News

ADDED : நவ 23, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவின் மூன்று சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகளை, ஆளும் காங்கிரஸ் கட்சி பொய்யாக்கி உள்ளது. மூன்று தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட குமாரசாமி, பசவராஜ் பொம்மை, துக்காராம் ஆகியோர் வெற்றி பெற்று எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் சென்னப்பட்டணா, ஷிகாவி, சண்டூர் ஆகிய சட்டசபை உறுப்பினர் பதவிகளை முறையே குமாரசாமி, பசவராஜ் பொம்மை, துக்காராம் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

காலியான இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

சென்னப்பட்டணாவில் கூட்டணி வேட்பாளராக நிகில் குமாரசாமி, காங்கிரஸ் சார்பில் யோகேஸ்வர் ஆகியோரும்; சண்டூரில் காங்கிரஸ் சார்பில் அன்னபூர்ணா, கூட்டணி வேட்பாளராக பங்காரு ஹனுமந்து உள்ளிட்டோரும்; ஷிகாவியில் பரத் பொம்மை, காங்கிரஸ் வேட்பாளராக யாசிர் அகமதுகான் பதான் உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.

ஆளுங்கட்சியாக இருப்பதால், மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என, காங்கிரஸ் உறுதி பூண்டது. சென்னப்பட்டணா தொகுதியில் துணை முதல்வர் சிவகுமார் முழு கவனத்தையும் வைத்திருந்தார்.

லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில், கூட்டணி வேட்பாளராக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத் வெற்றி பெற்றார். சுரேஷ் தோற்றார்.

தன் தம்பி தோற்றதை சிவகுமாரால் ஜீரணிக்க முடியவில்லை. சென்னப்பட்டணாவில் சுரேஷை களமிறக்கி வெற்றி பெற வைத்து, தோல்விக்கு பழிதீர்க்க சிவகுமார் வியூகம் வகுத்தார். ஒருவேளை தோற்றால், மீண்டும் தர்மசங்கடத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் தயங்கினார்.

இதனால், பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்த யோகேஸ்வருக்கு அவர் வலை விரித்தார்.

ஆனால் கூட்டணி சார்பில் போட்டியிட, யோகேஸ்வர் மிகவும் ஆர்வமாக இருந்தார். டில்லிக்கு சென்று மத்திய அமைச்சர் குமாரசாமி உட்பட, பா.ஜ., தலைவர்களை சந்தித்து, சீட் தரும்படி மன்றாடினார். பல முறை கேட்டும் குமாரசாமி சம்மதிக்கவில்லை.

பா.ஜ., தலைவர்களும், 'சென்னப்பட்டணா குமாரசாமியின் தொகுதி. அவர் யாருக்கு சீட் கொடுக்கிறாரோ, கொடுக்கட்டும்' என கூறி கைவிரித்தனர்.

எரிச்சலடைந்த யோகேஸ்வர், சிவகுமார் விரித்த வலையில் எளிதாக விழுந்தார். எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,விலிருந்தும் வெளியேறி காங்கிரசில் இணைந்தார். சென்னப்பட்டணாவின் வேட்பாளராக அவர் களமிறக்கப்பட்டார்.

சிவகுமாரின் எண்ணம் எளிதானது. இவரை வெற்றி பெற வைக்க, முதல்வர், துணை முதல்வர் உட்பட, மொத்த அமைச்சரவையும் சென்னப்பட்டணாவில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர்.

அதேபோன்று ஷிகாவியில், எம்.பி., பசவராஜ் பொம்மையின் மகன் பரத் போட்டியிட்டார். அவரை தோற்கடிக்க வேண்டும் என, முதல்வர் சித்தராமையா வியூகம் வகுத்தார். இது பலனளித்தது. சண்டூரில் எம்.பி., துக்காராமின் மனைவி அன்னபூர்ணாவுக்கு சீட் கொடுத்திருந்தனர். பல தலைவர்கள் சண்டூரில் பிரசாரம் செய்திருந்தனர்.

மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இரண்டு தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்கள், ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என சில நாட்களுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பு அடித்துக் கூறியது.

'எனக்கு வெற்றி வாய்ப்பு குறைவு. மத்திய அமைச்சர் குமாரசாமியை, அமைச்சர் ஜமீர் அகமது கான், கரியன் என, கிண்டல் செய்தது, எனக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்' என, யோகேஸ்வரும் கூட கூறியிருந்தார்.

ஆனால் அனைத்து கணிப்புகளும் நேற்று பொய்த்துப் போயின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவு, நேற்று வெளியானது. மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.

'முடா' சர்ச்சை, வால்மீகி மேம்பாட்டு ஆணையம், வக்பு சொத்து விவகாரம், அமைச்சர் ஜமீர் அகமது கானின் பேச்சு என, எதுவும் இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ம.ஜ.த., இல்லாத ராம்நகரை உருவாக்குவதில், துணை முதல்வர் சிவகுமார் வெற்றி கண்டுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் ராம்நகர், கனகபுரா, மாகடியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

சென்னப்பட்டணா தொகுதியில் மட்டும் குமாரசாமி வெற்றி பெற்றிருந்தார். தற்போது அந்த தொகுதியையும் பறித்துக் கொண்ட காங்கிரஸ், ராம்நகரை ம.ஜ.த., இல்லாத மாவட்டமாக்கியது.

மத்திய அமைச்சர் குமாரசாமி, பிடிவாதம் பிடிக்காமல், யோகேஸ்வருக்கு கூட்டணி வேட்பாளராக சீட் கொடுத்திருந்தால், தொகுதியை இழக்க நேரிட்டிருக்காது என, சில தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us