ADDED : ஜூன் 18, 2025 06:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி மருத்துவக் கவுன்சிலை கலைக்க, துணைநிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி மருத்துவ கவுன்சில், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மருத்துவ நடைமுறையை ஒழுங்குபடுத்தும் தன்னாட்சி பெற்ற சட்டப்பூர்வ அமைப்பு. நோயாளிகளின் பாதுகாப்பைப் பாதுகாக்க தனியார் டாக்டர்களின் நெறிமுறைகளையும் இந்தக் கவுன்சில் கண்காணிக்கிறது.
டில்லி மருத்துவக் கவுன்சிலை சீரமைக்கும் பணியைத் துவக்க, தற்போதுள்ள கவுன்சிலை கலைக்க, டில்லி அரசின் சுகாதாரத் துறை, துணைநிலை கவர்னருக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட துணைநிலை கவர்னர் சக்சேனா, டில்லி மருத்துவ கவுன்சிலைக் கலைக்க உத்தரவிட்டார்.