ADDED : அக் 05, 2024 11:01 PM

பெங்களூரு: தடை செய்யப்பட்ட சீனா பூண்டை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு துறை முடிவு செய்துள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு துறை வெளியிட்ட அறிக்கை:
சீனாவின் பூண்டில் ரசாயன அம்சம் அதிகம் உள்ளது. கெட்டுப்போகாமல், புத்தம் புதிதாக தென்படும் நோக்கில், சீன பூண்டுகளில் ரசாயனம் தெளிக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த பூண்டுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு உட்பட கர்நாடகாவின் சில இடங்களில் இயற்கையாக விளையும் பூண்டுகளுடன் சீன பூண்டு கலந்து விற்பதாக புகார்கள் வந்துள்ளன. எனவே பூண்டு மாதிரிகள் சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம்.
சீன பூண்டில் ரசாயனம் கலப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, கல்லீரல் பிரச்னை என பலவிதமான பாதிப்பு ஏற்படும். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.